நாகாலாந்து, மேகாலயா: வாக்குப்பதிவு எவ்வளவு?

அரசியல்

நாகாலாந்தில் 81.94 சதவிகித வாக்குகளும் மேகாலயாவில் 74.32 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோகியோங்க் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 59 தொகுதிகளுக்கு இன்று (பிப்ரவரி 27 ) வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ், பாஜக, தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினர்.

இந்நிலையில், மேகாலயாவில் 74.32 சதவீதம் பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல், நாகாலாந்திலும் சட்ட மன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இளைஞர்கள், பெண்கள் எனப் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகாலாந்தில் 81.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (மார்ச் 2 ) ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அதிமுக கட்சி விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்!

குரூப் 2 தேர்வு குளறுபடி: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – தேதியை அறிவித்த சபாநாயகர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *