நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 2) காலை 8 மணிக்கு துவங்கியது.
திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகாலாந்து, மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஆளும் பாஜக, இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி, திப்ரா மோதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேகாலயா மாநிலத்தில் 59 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபர் ராய் உயிரிழந்ததால் தேர்தல் நடைபெறவில்லை. தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் ஆகிய நான்கு கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
நாகாலாந்து மாநிலத்தில் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேதோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி – பாஜக கூட்டணி, காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இன்று காலை 8 மணிக்கு மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு துவங்கியது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் மேகாலயா மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
செல்வம்
தபால் வாக்குகள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!
ஈரோடு கிழக்கு வெல்லப்போவது யார்?: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !