மதியம் 1 மணி நேர நிலவரப்படி நாகாலாந்து மாநிலத்தில் 58.8 சதவிகிதமும் மேகாலயா மாநிலத்தில் 44.7 சதவிகிதமும் வாக்கு பதிவாகி உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 21,40,453 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணாமூல் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் இங்கு நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 13,17,632 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது.
காங்கிரஸ், நாகாலாந்து மக்கள் முன்னணி, லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி நாகாலாந்து மாநிலத்தில் 58.8 சதவிகிதமும், மேகாலயாவில் 44.7 சதவிகிதமும் வாக்கு பதிவாகி உள்ளது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
செல்வம்
1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!
ஆதார் ஏற்க மறுப்பு : தேர்தல் அலுவலர் பேட்டி!