மீண்டும் மோடி பிரதமரானால் சந்திர மண்டலம் தான் – சீமான்
மீண்டும் மோடி பிரதமரானால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இன்று(ஜூலை 26) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து என்.எல்.சி ( Neyveli Lignite Corporation )நிலம் கையகப்படுத்துகிறது.
விவசாயிகளை இந்த மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள். என்.எல்.சி அமைக்கிறார்கள். இது நல்லதா? விவசாயங்களை அழிப்பது ஏற்புடையது அல்ல. அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார். அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுகிறார்.
திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர் செய்த ஊழல்பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை? அதிமுகவினர்கள் புனிதர்களா? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை. அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும் ஆனால், சம்பவத்தன்று மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார்?
மணிப்பூர் கலவரம் பற்றி திமுகவினர் பேசுவது புனிதமா? குஜராத் கலவரத்தை நியாய படுத்தி அப்போதைய கலைஞர் தலைமையிலான திமுகவினர் பேசினர். இப்போது எதிராக பேசுகின்றனர். தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு கலைஞர் பெயர் வைக்கின்றார் ஸ்டாலின். டாஸ்மாக் கடைக்கு ஏன் கலைஞர் டாஸ்மாக் கடை என பெயர் வைக்கவில்லை?
தமிழக மீனவர்கள் கைது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளாரே என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் ஒரு போஸ்ட்மேன் தான். காங்கிரஸ், திமுகவினர் கூட்டணியும், அதிமுக – பாஜக கூட்டணியும் ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் பல திட்டங்களை தருவதாக தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் முன்னால் ஐபிஎஸ் அதிகாரி பயிற்சியின் போது நடைபயற்சி போகிருப்பார்.
தற்போது உடலை FIT ஆக வைத்துக்கொள்ள நினைத்து நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை. இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராது.
சந்திரயான் பற்றி மோடி பாராட்டி பேசிவருகின்றார். அங்கே குடியேற நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா? முஸ்லிம்களையா? கிறிஸ்தவர்களையா? என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும்.
பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது? அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்” என்று கூறினார் சீமான்.
இராமலிங்கம்
பயிர்களுக்கு இழப்பீடு: கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்
அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியாது : கபில் சிபல் வாதம்!