நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை அணியில் 11 பேரும் தமிழர்களாக இருப்பார்கள் என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீரவணக்க பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு முத்துக்குமார், பழனிபாபா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ”நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தது முதல் கூட்டணி இல்லை. தனித்து தான் பயணம். நாங்கள் மக்களை நம்புகிறோம்.
நாம் தமிழர் கட்சி – #தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இன்று 28-01-2024 #கோவில்பட்டி பெருந்தலைவர் காமராசர் சிலை அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற 'புரட்சித் தீ!' வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,https://t.co/e0NhovKpcI pic.twitter.com/GX269JX8o3
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 28, 2024
நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தைக் கண்டு பிற கட்சிகள் பயப்படுகின்றன. இது கொள்கைக்காக கூடும் கூட்டம். திமுக கருணாநிதி குடும்பத்தின் சொத்து.
ஒரு ரூபாய் கொடுக்காமல் பிற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வதுதான் புரட்சி.
திமுக, அதிமுக கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது திமுக, பாஜக தான். திமுக மாநாட்டில் ‘காவாலா’ பாட்டு போட்டு கூட்டத்தை கூட்டுகின்றனர்.
நாங்கள் குத்துப்பாட்டு போட்டு கூட்டத்தை கூட்டவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள் தான். அண்ணனும் அவர்களுடன் சேர்ந்து ஆடுவேன்.
அண்ணன் ஆட்சிக்கு வந்தா CSK டீம்ல மொத்த பேரும் தமிழர்கள்தான்..#seeman #csk #chennaisuperkings #viral #seemanspeech #sdcworld #ntk pic.twitter.com/hfVcticYdM
— SDC World (@sdcworldoffl) January 29, 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. அது நாம் ஆட்சிக்கு வந்தவுடன் போய்விடும்.
சென்னை பெயரில் விளையாடும் அணியில் தமிழர்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. நாம் அதிகாரத்துக்கு வரும்போது அது மாற்றப்படும் ,” என்றார்.
தற்போது சென்னை அணி குறித்து சீமான் பேசியது, சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் #Seeman என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ED சம்மன் அல்ல பாஜக சம்மன்” : அமலாக்கத் துறையில் லாலு ஆஜர்!
“ஐஸ்வர்யா அப்படி சொல்லல” : ரஜினிகாந்த் விளக்கம்!
அப்டியே தமிழ் ஸ்டம்ப் தமிழ் பால் மட்டுமே யூஸ் பன்ன உத்தரவு போடுங்கண்ணே..🚶