”ஸ்டாலின் முதல்வராக காரணமே நான் தான்” சீமான் அதிரடி!

அரசியல்

நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ”தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை” தொடக்க விழா இன்று (மார்ச் 19 ) நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

”முன்பே இந்த பாசறை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தற்பொழுதுதான் தொடங்கி இருக்கிறோம். பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார், குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை.

நாங்கள் வந்த பிறகு தான் தேடி தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைத்து வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டி இருக்கிறது.

திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டுகாலப் போராட்டம், சிறையிலிருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல. சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள்.

அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் உள்ளது. இந்த நான்கு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி, வரும் 23 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடையில் அரசுக்கு என்ன திறன் உள்ளது? அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அதனை செயலாக்கம் செய்ய வேண்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதில் இங்கு பிரச்சனை இல்லை. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். அது தான் முக்கியம் “ என்று கூறினார்.

ஆதன் சேனல் மாதேஷிடம் சீமான் பேரம் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ தொடர்பாக செய்தியளர்கள் எழுப்பிய கேள்விக்கு ,

“தேர்தல் நேரங்களில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் எங்களை விளம்பரம் செய்கிறோம். சில தனியார் தொலைக்காட்சிகளில் பணம் செலுத்தி, எங்கள் மேடைப்பேச்சுகளை நேரலையில் போட சொல்வோம். பல இடங்களில் 12 லட்சம் , 10 லட்சம் கேட்டதால் எங்களால் கொடுக்க முடியவில்லை.

அவர்கள் குறைந்த கட்டணத்திற்கு செய்வதாக சொன்னார்கள். அதனால் சென்றோம். கருத்துகணிப்பை எனக்கு சாதகமாக செய்ய சொல்லக் கூடிய ஆள் நான் கிடையாது. ஏதாவது பைத்தியகாரன் அப்படி சொல்லிக் கொண்டிருப்பான்” என ஆவேசமாக பேசினார் சீமான்.

மேலும், பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு , திமுகவின் ஓட்டை பிரிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சீமான்,

“நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் இல்லை, நாட்டை பிடிக்க வந்த ஆள்…நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான்.

அதற்காக நான் திமுகவின் பி டீம் ஆக ஆகிவிடுவேனா? அரசியலில் நான் தான் ராஜா, நாங்கள் தான் நம்பர் ஒன்” என கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!

ராகுல் வீட்டில் போலீஸ்: அதானி விவகாரத்தை திசை திருப்பவா?

ராஜினாமா விவகாரம்: அண்ணாமலை பதில்!

Seeman Speech today
+1
0
+1
4
+1
1
+1
3
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *