என்னை பொறுத்தவரை என் தாய் ஜெயலலிதா அம்மையாரை விட 100 மடங்கு பவர்புல், என் மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட 1000 மடங்கு பவர்புல் என்று அண்ணாமலை இன்று (மார்ச் 8) தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அவர் பேசுகையில், “ நான் கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட யாருடனும் என்னை ஒப்பிடவில்லை. சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் உள்ளார்கள். நான் ஜெயலலிதா எடுத்த மாதிரியான முடிவுகளை எடுப்பேன் என்ற உவமையில் அவ்வாறு பேசினேன்.
என்னை பொறுத்தவரை என் தாய் ஜெயலலிதா அம்மையாரை விட 100 மடங்கு பவர்புல், என் மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட 1000 மடங்கு பவர்புல்.
நான் நேற்று மதுரை, சென்னை விமான நிலையங்களில் என்ன பேசி உள்ளேனோ அதுதான் என் கருத்து. எங்கள் பாதை தனிபாதை. பாஜகவை அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள்” என்றார்.
மேலும், “தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறுவேறு கட்சியில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள்.
பாஜகவில் இருந்து இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர நிர்வாகிகள் கட்சியில் இருந்து செல்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் பெரிய பெரிய தலைகள் பாஜகவில் இருந்து செல்ல வாய்ப்புள்ளது.
அதேபோல் அங்கிருந்தும் பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. நான்கு பேர் போவார்கள், 40 பேர் வருவார்கள்.” என்றார்.
அப்போது அவரிடம், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே அனுப்பி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ”ஆன்லைன் ரம்மியை தமிழக பாஜக எதிர்க்கிறது. மறுபடியும் இந்த மசோதாவை சரி செய்து கொடுக்க வேண்டிய வாய்ப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உள்ளது. மசோதாவை சரி செய்யாமல் அனுப்பி வைத்தாலும் அதனை வேறு வழியில்லாமல் ஆளுநர் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இப்போது ஆளுநர் என்ன கருத்து சொல்லி மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் என்பதை சபாநாயகர் மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே நாளில் இரண்டு நல்ல செய்திகள்: விஜயகாந்த் ரசிகர்கள் குஷி!
ஆன்லைன் ரம்மி தடை மசோதா: மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்
முத்திடுச்சி…..