எனது அரசியல் இன்னிங்ஸ்… சோனியா காந்தி சூசகம்

அரசியல்

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பயணத்துடன் தனது அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் முடிவுக்கு வந்துள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் செயற்குழுவின் 85வது வழிகாட்டுக் குழு மாநாடு நேற்று தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து சுமார் 15 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முழு அதிகாரம் அளிக்கும் வகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 2வது நாளான இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் மூவரும் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், “இது காங்கிரசுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சவாலான காலம். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும், தாக்கி அதை பாஜக – ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது.

ஒரு சில தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பாஜக நாடு முழுவதும் வெறுப்பை மூட்டுகிறது. இது சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்து கடுமையாக தாக்குகிறது.” என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு கிடைத்த மக்களவை வெற்றிகள் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்தன.

ஆனால் அதைவிட காங்கிரஸ் கட்சியின் திருப்பு முனையாக அமைந்துள்ள பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது அரசியல் இன்னிங்ஸ் நிறைவடைந்தது தான் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பொன்னியின் செல்வன் 2: பார்த்திபன் சொன்ன தகவல்!

இதுவரை 6 வீரர்கள் அவுட்… கடும் நெருக்கடியில் தவிக்கும் ஆஸ்திரேலியா

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0