அதிகாரத்தின் ஒட்டுமொத்த சக்தியும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சிக்கிறது. என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் இன்று (மார்ச் 23 ) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ராகுல் காந்தி வேண்டுதலின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று (மார்ச் 23 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அதிகாரத்தின் ஒட்டுமொத்த சக்தியும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சிக்கிறது. என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார்” என்று கூறியுள்ளார்.
“உண்மையைப் பேசி வாழ்ந்தார், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம் என்றும் உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளன” என்று பிரியங்கா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக சார்பாக ஓபிஎஸ்சுக்கு அனுமதியா? எடப்பாடி வெளிநடப்பு!
விரைவில்… இன்னொரு குண்டு: ஹிண்டன்பர்க் கொடுத்த க்ளூ!