அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வரும் செய்திகள் அனைத்து அமைச்சர்களையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டது.
தங்கள் இலாகா மாற்றப்படுமோ என்ற வருத்தத்திலும், பீதியிலும் ஒருவருக்கு ஒருவர் கவலையைப் பகிர்ந்து கொண்டனர். இதில், அறநிலையத் துறையையும், சிஎம்டிஏ துறையையும் கைவசம் வைத்துள்ள சேகர்பாபு எடுத்த ஒரு முயற்சி அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளின் புருவத்தை உயர வைத்தது.
அவர் செய்த முயற்சிதான் என்ன?
வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமியின் கைவசம் உள்ளது. அவரிடம் இருந்த சிஎம்டிஏ-வைத்தான் பிரித்து சேகர்பாபுவிடம் முதல்வர் சமீபத்தில் தான் தந்திருந்தார்.
தற்போது சேகர்பாபு வீட்டு வசதி வாரிய துறையையும் எனக்குத் தாருங்கள் என்று முதல்வருக்கு ஒரு அழுத்தம் தந்திருக்கிறார். இதையறிந்த முத்துசாமி ஏற்கனவே என்னிடம் இருந்த சிஎம்டிஏவை எடுத்து அவரிடம் தந்துவிட்டீர்கள். அப்பொழுதே நான் ஏதோ செயல்படாத மந்திரி போல் எனக்கு ஒரு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.
இப்போது தயவு செய்து துறையை மாற்றிவிடாதீர்கள் என்று முதல்வருக்குத் தகவல் அனுப்பியுள்ளார். முதல்வரோ அப்படி எல்லாம் எந்த யோசனையும் இல்லை… கவலைப்படாதீர்கள் என்று பதில் சொல்லிவிட்டாராம்.
பிரியா