முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஜனவரி 29) மரியாதை செலுத்தினார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் ஈழத்தமிழர்களை காப்பாற்ற கோரி முழக்கமிட்டவாறு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முத்துக்குமார் என்ற இளைஞர் தீ வைத்துக்கொண்டார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முத்துக்குமார் மரணத்தை தொடர்ந்து சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வீர வணக்க ஊர்வலம் நடத்தினர்.
இந்தநிலையில், முத்துக்குமாரின் 14-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் வளாகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் முத்துக்குமார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முத்துக்குமார் குறித்து திருமாவளவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கரும்புலி முத்துக்குமார் வீரவணக்க நாள். ஈழம் வெல்ல இன்னுயிர் ஈந்த மானமிகு போராளி தம்பி கரும்புலி முத்துகுமாரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்து விசிக சார்பில் அவருக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“விவசாயத்தை பாதுகாப்போம்” : கன்னியாகுமரி டூ காஷ்மீருக்கு மாட்டுவண்டி பயணம்!
நள்ளிரவில் சோகம்: லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்!