இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு!

அரசியல்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 9 ) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஆர்.முத்தரசன் மீண்டும் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகள்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெறுவது வழக்கம்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி திருப்பூரில் சிபிஐ-ன் 25வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு 4 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார் , இந்த மாநாட்டில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் , மாநாட்டின் கடைசி நாளான இன்று ( ஆகஸ்ட் 9 ) நடைபெற்ற சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டில், 3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சிறப்புக் கட்டுரை : 2ஜி இழப்பு என்றால் 5ஜியில் நடந்தது என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.