பழச மறந்து பன்னீர் சொல்றத கேளுங்க : டி.டி.வி.தினகரன் சூசகம்

அரசியல்

பழைய மனக்கசப்புகளை மறந்து, நண்பர்களாக, அண்ணன் – தம்பிகளாக, பங்காளிகளாக அனைவரும் இணக்கமாக செயல்படவேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ்.க்கு தினகரன் ஆதரவு

இன்று (ஆகஸ்ட் 29) தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், திமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற அனைவரும் இணக்கமாக செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை தாமும் ஆமோதிப்பதாகக் கூறினார்.

மேலும், கட்சியில் இருந்து மனக்கசப்புகள் மூலம் வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் ஒரே கட்சியில் இணைந்து செயல்படவேண்டும் என்று அவசியமில்லை.

அவரவர் அவரவராகவே இருந்துகொண்டு இணக்கமாக செயல்பட வேண்டும் என்று தான் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாகத் தெரிவித்தார்.

பஞ்சபாண்டவர்கள் போல் இருந்து துரியோதனனை எதிர்ப்பது போல் பிரிந்து சென்ற அனைவரும் இணக்கமாக இருந்து திமுகவை எதிர்க்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசினார்.

மனக்கசப்புகளை மறந்துவிடுங்கள்

இதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவதாகவும் அது அண்ணன் ஜெயக்குமாருக்கு புரியவில்லை என்றும் மறைமுகமாக தூதுவிட்டு இருக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, நடந்ததை மறந்து இணைந்து செயல்பட நாங்கள் ஏற்கனவே அழைப்புவிடுத்தோம்.

ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அதன் காரணமாகவே திமுக ஆட்சியை பிடித்து இருக்கிறது. எனவே பழைய மனக்கசப்புகளை மறந்து,  நண்பர்களாக, அண்ணன் – தம்பிகளாக, பங்காளிகளாக அனைவரும் இணக்கமாக செயல்படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று டி.டி.வி. தினகரன் பதிலளித்தார்.

மக்களுடன் நிற்போம்

மேலும் 8 வழிச்சாலையால் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றும், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பது அவசியமானது தான், ஆனால் அதேசமயம் நிலம் கையகப்படுத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு முன்கூட்டியே உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என்றும் தினகரன் கேட்டுக்கொண்டார்.

அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது

பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில்  நடக்கும் மொய்விருந்து கலாச்சாரம் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதற்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன்,

மொய் விருந்து என்பது வட்டியில்லாத கடன் போன்றது, ஒருவரை கைத் தூக்கிவிடுவதற்கு சமம். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு  எதுவும் தெரியாது என்றார். 

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது,  அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதால் தமிழக அரசும், மத்திய அரசும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கலை.ரா

‘பழைய பாசத்தோடு பேசிய ஆர்.பி.உதயகுமார்’ : தினகரன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *