சிவ்தாஸ் மீனா மாற்றம்: புதிய தலைமைச் செயலாளராகிறார் முருகானந்தம்?

அரசியல்

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக இன்று (ஆகஸ்ட் 18) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். 2023-ஆம் ஆண்டு இறையன்பு ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிவ்தாஸ் மீனா தலைமை செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்த சிவ்தாஸ் மீனா, விழாவின் நிறைவாக நன்றியுரை ஆற்றினார். விழா முடிந்த சில நிமிடங்களில் அவர் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக மாற்றப்பட்ட அறிவிப்பு வெளிவந்தது.

இந்தநிலையில்,அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “முதல்வரின் (எஸ் 1)  முதன்மைச் செயலாளர் முருகானந்தம் அடுத்த தலைமை செயலாளராகிறார். முருகானந்தம் இடத்திற்கு முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத் அல்லது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன் வரலாம்” என்று சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“நாணயமிக்க கலைஞருக்கு நூற்றாண்டு நினைவு நாணயம்” – ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *