சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (செப்டம்பர் 17) மாலை தொடங்கிய திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுகவின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி பவள விழா மற்றும் பெரியார் பிறந்தாள், அண்ணா பிறந்தநாள், அக்கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செப்டம்பர் 17) மாலை 5 மணிக்குத் தொடங்கியது.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், பெரியார் விருதை பாப்பம்மாளின் சார்பாக நிகழ்ச்சிக்கு வந்த அவரது குடும்ப உறுப்பினருக்கு வழங்கினார். மேலும் அண்ணா விருதை அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கும், கலைஞர் விருதை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருதை கவிஞர் தமிழ்தாசனுக்கும், மற்றும் பேராசிரியர் விருதை வி.பி.இராஜனுக்கும் ஸ்டாலின் வழங்கினார்.
இதுமட்டுமல்லாமல், முன்னாள் மத்திய அமைச்சர் தஞ்சை எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருதை ஸ்டாலின் வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்சிக்காகச் சிறப்பாக பணியாற்றிய நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்களுக்கு ரூ.1 லட்சம் காசோலையும், கட்சி அடையாள அட்டையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவித்தார்.
முன்னதாக விழாவின் தொடக்கத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றுவது போலச் சிறப்பு நிகழ்வு நடந்தது.
அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதில் ஏன் தயக்கம்? – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேள்வி!
Asian Champions Trophy 2024: அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற இந்தியா!