தெலங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முன்னிலையில் உள்ளது
தெலங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடந்தது.
முனுகோடு சட்டமன்ற உறுப்பினர் ராஜ் கோபால் ரெட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், முனுகோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ராஜ் கோபால் ரெட்டி பாஜக சார்பில் மீண்டும் முனுகோடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் பிரபாகர் ரெட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வை ஸ்ரவந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் முனுகோடு சட்டமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது.
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள், நல்கொண்டா மாவட்டத்தில் இன்று காலை முதல் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகிறது.
நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 26,443 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டி 25,729 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் 714 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி இருக்கிறார்
முதல் சுற்று முடிவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகித்த நிலையில், அடுத்த இரண்டு கட்ட சுற்றுகளிலும் பாஜக முன்னிலை வகித்தது. நான்காம் கட்ட சுற்று வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
15 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், பாஜக மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
செல்வம்
பொன் மாணிக்கவேல் வழக்கு – சிபிஐ விசாரணை!
பாலியல் குற்றச்சாட்டு : நள்ளிரவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!