பாதுகாப்பாக இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை: பினராயிக்கு ஸ்டாலின் கடிதம்!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது என்று கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார்.

“முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

alt="Mullai Periyar Dam"

மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று பல்வேறு கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இன்று (ஆகஸ்டு 9) கடிதம் எழுதி உள்ளார். அதில், “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது.

அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை.. மூவர் கைது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts