பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் இந்த பழக்கத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “காவிரி டெல்டாவில் 3 நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலம் தமிழ்நாடு முதல்வர் கொடுத்த தொடர் நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிலக்கரி சுரங்கத்திற்காக அறிவித்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும். மேலும் இந்த அறிவிப்பு குறித்து முன்னதாக தமிழ்நாடு அரசிடமும் ஆலோசனை நடத்தவில்லை. இதனையடுத்து மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு 24 மணி நேரத்தில் கடிதம் எழுதினார்.
மேலும் சட்டமன்றத்தில் அவர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாகவே நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் இந்த பழக்கத்தை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
வேளாண்மை பட்ஜெட் என்று அறிவித்து அதன்மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்வரின் எண்ணத்திற்கு கிடைத்த வெற்றியாக இது உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் – தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி: உதயநிதி
முன் ஜென்மம், இந்த ஜென்ம பாலினத்தை நிர்ணயிக்குமா?