கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-23-ஆம் ஆண்டில் 5,36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியபோது, “2022-23-ஆம் ஆண்டில் பல தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக மொத்த சாகுபடி பரப்பு 1,93,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. மொத்தமாக 69,48,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2022-23-ஆம் ஆண்டில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டங்களில் 5,36,000 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1,50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டது.
ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.195 கூடுதலாக வழங்கி கொள்முதல் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது!
கொரோனா தொற்று அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை!