பாஜக பெண் நிர்வாகியை தாக்கியதாக பாஜக மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Case against Amar Prasad Reddy
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகியாக இருந்து வருகிறார்.
கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளைத் துவக்கி வைக்க வருகை தந்தார்.
அப்போது மோடியை வரவேற்பதற்காக சென்னை பெருங்கோட்ட பாஜக சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்துக்கும் பல லட்சங்கள் இதற்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் அப்போது பாஜகவிலேயே பேசப்பட்டது.
அந்த வகையில் கோட்டூர்புரம் வட்டாரத்தைச் சேர்ந்த சித்ரா நகர் பகுதியில் இருந்து மோடியை வரவேற்க கூட்டம் திரட்டுவது தொடர்பாக ஆண்டாளுக்கும், பாஜகவின் இன்னொரு நிர்வாகி நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் ஆண்டாள் வீட்டுக்கு பாஜகவைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி, ஸ்ரீதர் மற்றும் மூவர் சென்றுள்ளனர்.
இதில் ஸ்ரீதர் பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் தலைவரான அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர், அதோடு கட்சியிலும் பதவியில் இருக்கிறார் என்கிறார்கள் பாஜகவினர்.
ஆண்டாள் வீட்டுக்குச் சென்று ஆண்டாளையும் அவரது அக்கா தேவியையும் தாக்கியிருக்கிறார்கள் ஸ்ரீதர் குழுவினர்.
அப்போது, ‘அமர்பிரசாத் ரெட்டியிடம் நீங்கள் பணம் வாங்கிட்டீங்க. அதில் எங்களுக்கு பங்கு வேண்டும்’ எனவும் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்தனர்.
தொடர்ச்சியாக தாக்கிய போது தேவியின் மண்டை உடைந்து உடனடியாக பாரதிராஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். அதன் பிறகு போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறினால் குடும்பத்துடன் உங்களை கொலை செய்துவிடுவேன் என ஸ்ரீதர் மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்” என்கிறார்கள் பாஜக வட்டாரத்திலேயே.
பாஜக பெண் நிர்வாகி புகாரின் பேரில் அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் , நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளிட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்ததுதல் உள்ளிட்ட *147,452,323,324,354,427, 506/1, 4 of women) 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
“கோயில் கட்டினால் அவர் பக்கம் போய்விடுவார்களா?” : எடப்பாடி விமர்சனம்!
கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!
Case against Amar Prasad Reddy
ஆட்சி மாறாமல் போகாது..பழய தீமுக மாதிரி ஒரு ஆள் கூட இப்போது இல்லை..அடக்கி வாசித்தல் நலம்..