வயநாடு நிலச்சரிவு: ராணுவ உடையில் களமிறங்கிய மோகன்லால்… ரூ.3 கோடி நிதியுதவி!

Published On:

| By Minnambalam Login1

mohanlal wayanad

வயநாடு நிலச்சரிவின் பலி எண்ணிக்கை 350-ஐ கடந்த நிலையில், நடிகரும் கெளரவ லெப்டினன்ட் கர்னலான மோகன்லால் இன்று (ஆகஸ்ட் 3) முண்டக்கை கிராமத்தைப் பார்வையிடச் சென்றார்.

மோகன்லால் முண்டக்கை கிராமத்தைப் பார்வையிடச் சென்றதைப் பாதுகாப்புத் துறையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பரத் பூஷன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

mohanlal wayanad

அதில் அவர் “நடிகரும் கெளரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், மற்றும் அவரது 122 டிஏ பட்டாலியனுடன்  வயநாட்டிற்குப் பார்வையிட வந்திருப்பது, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். இது நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கிறவர்களின் மன உறுதியை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.மோகன்லால், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ஏற்கனவே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் “நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் ராணுவம் மற்றும் தன்னார்வலர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிவாரண பணிகளுக்கு என்னுடைய விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பாக ரூ 3 கோடி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மோகன்லாலுக்கு 2009 வருடம், இந்தியத் தரைப்படை ராணுவத்தின் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் மலையாளத் திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கியிருக்கிறார்கள்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!

தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து… ஸ்பெஷல் பஸ் இயக்கம்!

தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து… ஸ்பெஷல் பஸ் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share