பொங்கல் வாழ்த்து: தமிழில் தெரிவித்த மோடி

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தை திருநாளான பொங்கல் திருநாள் இன்று (ஜனவரி 15) உலக தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருநாளில் இந்திய அரசியல் தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி தனது பொங்கல் வாழ்த்தினை தமிழில் தெரிவித்துள்ளார்.

அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும் இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அறுவடையை கொண்டாடும் இந்த பொங்கல் விழாவானது, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வெறு பெயரில் அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் பிகு என்றும், பஞ்சாபில் லோஹ்ரி என்றும், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மஹா சங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, அந்தந்த மாநிலங்களின் மொழியில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பொங்கல் திருநாளை குடும்பமாக கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள்!

தொடரை வென்றது இந்தியா : மைதானத்தில் ஒலித்த தோனியின் பெயர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts