Modi's eyes will not believe his tears! - CM MKStalin

தாய்மொழி தமிழ்… மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: ஸ்டாலின் காட்டம்!

அரசியல்

“மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) விமர்சித்துள்ளார்.

நமோ செயலி மூலம் “எனது பூத் வலிமையான பூத்” என்ற தலைப்பில் தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 29) உரையாற்றினார்.

அப்போது பேசிய மோடி, “எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழில் என்னால் பேசமுடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழின் பெருமைகளை உரக்க சொல்ல வேண்டும்”எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“நேற்று மாலைச் செய்தி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலைச் செய்தி, அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும். ஆனால், மோடியின் கண்ணீர்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு.

விமானங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

“எங்கும் இந்தி. எதிலும் இந்தி” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்… உண்மையா?

டேனியல் பாலாஜி மறைவு: கெளதம் மேனன், வெற்றி மாறன் அஞ்சலி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *