காசியில் மோடி, காந்திநகரில் அமித்ஷா : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 2) டெல்லியில் வெளியிடப்பட்டது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் விருப்ப மனு பெறுதல், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரித்தல், வேட்பாளர்களை தேர்வு செய்தல் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாஜக முயன்று வருகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் கடந்த 28ஆம் தேதி இரவு நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக டெல்லி பாஜக தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இன்று மாலை பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

அதன்படி இன்று மாலை முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.

அதில், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரிலும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20 , டெல்லியில் 5 இடங்களில்  போட்டி என மொத்தம் 195 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இவர்களில் 28 பேர் பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள், 27 எஸ்சி வேட்பாளர்களும், 18 எஸ்டி வேட்பாளர்களும் உள்ளனர். இந்த 195 பேரில் 57 ஓபிசி வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது.

முதல்கட்ட பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“பாஜக, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை” – சரத்குமார்

திரும்பத் திரும்ப கேட்போம்… தொகுதி பங்கீடு பற்றி திருமா பேட்டி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts