மோடி சுட்ட வடைகள்: திமுகவின் ‘மாஸ்டர்’ பிரச்சாரம்!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் 71-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மார்ச் 2 முதல் 4 வரை ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.
கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பொதுச்செயலாளர் துரைமுருகனில் துவங்கி ஏராளமான நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று மூன்றாவது நாள் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வடை வநியோகிக்கப்பட்டு, ‘இது மோடி சுட்ட வடை’ என்ற வாசகத்துடன் போஸ்டர் வழங்கப்படுகிறது.
அந்த போஸ்டரில் மோடி கையில் வடை இருப்பது போல படம் இடம்பெற்றுள்ளது. மேலும், மோடியின் புகைப்படம் உள்ள முகமூடி திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், பேருந்துகள் மற்றும் பொதுஇடங்களிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை விநியோகம் செய்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருப்பு பணம் மீட்பு வடை, அனைவருக்கும் தருவதாக சொன்ன 15 லட்சம் வடை, புல்லட் ரயில் வடை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைன்னு சொன்ன வடை, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வடை, 5 டிரில்லியன் பொருளாதார வடை, எல்லோருக்கும் சொந்த வீடு வடை, 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்ற ஸ்மார்ட் வடை, மேக்இன் இந்தியா எனும் வடை, தூய்மை இந்தியா எனும் ஊசி போன வடை என்று பொய்யான வாக்குறுதிகள் அளித்ததாக திமுகவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகையை முன்னிட்டு திமுகவினர் இந்த பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ளனர். இதேபோல எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திமுக ஐடி விங் #மோடி_வடைகள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொரோனா குமார்: சிம்புவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவரா?
திமுக ஆதரவில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: மோடி காட்டம்!