ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்!

அரசியல்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,

“காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகள். நேரு குடும்பத்துக்கு அப்பாற்பட்டவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது காங்கிரஸ் மீதான நம்பத்தன்மையை உயர்த்தியிருக்கிறது.

பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மல்லிகார்ஜூன கார்கே முன்னெடுக்க வேண்டும்.

மூன்றாவது அணி ஒன்று ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆட்சிக்கு வந்தால் ரூபாய் மதிப்பை உயர்த்துவதாக பிரதமர் மோடி கூறினார். பாஜக அரசின் மதவெறி, பொருளாதாரத்திலும் மிகப்பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியக் கடற்படையை சேர்ந்தவர்களே தமிழ்நாட்டின் மீன்பிடி படகு என கண்டறிந்த பிறகும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

கிச்சன் கீர்த்தனா – கருப்பட்டி அல்வா

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

2 thoughts on “ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்!

 1. ஜாதி வெறி குருமாக்கு உள்ளூர் பிரச்சனையே ஒழுங்கா தெரியாது. திருட்டு முக கட்சிக்கு கூஜா தூக்கும் வேலையை மட்டும் பார்க்கவும்.

  சர்வதேச நிதி மேலாண்மை விஷயத்தில் இவருக்கு துளி கூட அறிவு கிடையாத, அதனால் பொத்தி கொண்டு இருக்கவும்

  1. உலக அறிவாளி சங்கரே….
   வேணும்னா ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பொறுப்பேற்க வச்சிக்கலாமா?
   மோடி நான் ஆட்சிக்கு வந்தால் டாலர் ஒரு ரூபாய்க்கு குறைப்பேன்னு சொல்லித்தான வாக்கு கேட்டாரு?
   இப்ப எங்கே போய் மூஞ்சிய வச்சிருக்காரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *