ஊழலுக்கு எதிராக போராடும் பாஜகவை களங்கப்படுத்தும் பெரிய ஊழலாக தேர்தல் பத்திர திட்டம் மாறியதால், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது.
மொத்த தேர்தல் நிதிப் பத்திர நன்கொடையில் பாஜக மட்டும் 95 சதவிகிதம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் நிதிப் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடும் பாஜகவை களங்கப்படுத்தும் பெரிய ஊழலாக தேர்தல் பத்திர திட்டம் மாறியதால், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பாஜகவின் நலனுக்காக மோடி பதவி விலக வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பிரெட் தவா பீட்சா
தனித்துப் போட்டியா? : தந்தையின் பேச்சுக்கு உமர் அப்துல்லா மறுப்பு!
ஏதே டைட்டானிக்கும்… இந்தியா கூட்டணியும் ஒன்னா? : அப்டேட் குமாரு