“குழந்தைத்தனமாக பேசும் ராகுல்” – மக்களவையில் மோடி தாக்கு!

குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்துகொண்டதாக பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி,

“மூன்றாவது முறையாக மக்கள் எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் சிலரின் வேதனைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து பொய்களை பரப்பியதால், தேர்தல் களத்தில் தோல்வியடைந்தனர்.

காங்கிரஸ் கட்சி சாதி அரசியல் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. 99 இடங்களில் வெற்றி பெற்றதற்கு கூட்டணி கட்சிகள் தான் முக்கியமான காரணம்

குடியரசு தலைவர் உரை மீது நேற்று இன்றும் பல உறுப்பினர்கள் பதிலளித்தனர். ஏன் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட சிறப்பாக பேசினார்கள். ஆனால், மக்களவையில் நேற்று குழந்தைத்தனமாக எதிர்க்கட்சி தலைவர் நடந்ததுகொண்டதை நாம் பார்த்தோம்.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்த மூன்றாவது பதவிக்காலத்தில் நாங்கள் மூன்று மடங்கு வேகமாக வேலை செய்வோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி “மூன்றாவது முறையாக காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 99 மதிப்பெண்கள் எடுத்த ஒரு பையன் இருந்தான். தான் எடுத்த மதிப்பெண்ணை மக்களிடம் காட்டுவது அப்பையனின் வழக்கம்.

99 மதிப்பெண் என்று கேட்டதும் மக்கள் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். அப்போது ஒரு ஆசிரியர் வந்து ஏன் இனிப்பு கொடுக்கிறாய் என்று கேட்டார். அந்த பையன் எடுத்த 100க்கு 99 மதிப்பெண் அல்ல, 543க்கு 99 என்றார்.
தோல்வியில் உலக சாதனை படைத்திருக்கிறார் என்பதை இப்போது அந்தக் குழந்தைக்கு யார் விளக்குவார்கள்” என்று விமர்சித்தார் மோடி.

நேற்று ராகுல் காந்தி சிவனின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார். என்.டி.ஏ அரசையும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் மோடி.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“முதலில் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்” : திருவாளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை: மக்களவையில் மோடி காட்டம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts