“சாமானியர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பட்ஜெட்”: மோடி

அரசியல்

2023-2024 ஆம் ஆண்டு பட்ஜெட் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) துவங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடர் குறித்து பொருளாதார உலகில் இருந்து நேர்மறையாகவும் நம்பகமானதாகவும் செய்திகள் வருவது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கும் பெண்களுக்கும் மரியாதை சேர்க்கும் விதமாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது பார்வையை வைத்துள்ளது.

இந்தியா முதலில், குடிமகன் முதலில் என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னெடுத்துச் செல்வோம்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பட்ஜெட் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்ற நிர்மலா சீதாராமன் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒரு பெண்தான். அவர் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது.” என்று அவர் தெரிவித்தார்.

செல்வம்

மாமன்ற கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல்!

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: லட்சக்கணக்கில் பாதிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0