டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (அக்டோபர் 2) மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்த தினம் காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி டெல்லி ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெள்பதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், புதிய டெல்லி முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தியின் இலட்சியங்கள் மக்களுக்கு உத்வேகம்!
மேலும் காந்தி ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாத்மாவின் பிறந்தநாளில் அனைத்து நாட்டு மக்கள் சார்பாக அவருக்கு வணக்கங்கள். உண்மை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
காந்திஜி ஒரு நபர் அல்ல, சிந்தனை!
அதேபோன்று ராகுல்காந்தி தனது வாழ்த்து செய்தியில், “வாழவேண்டுமானால் பயமின்றி வாழ வேண்டும் – உண்மை, அன்பு, கருணை, நல்லிணக்கம், அனைவரையும் ஒன்றிணைக்கும் பாதையில் நடக்க வேண்டும் என்று காந்தி நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். காந்திஜி ஒரு நபர் அல்ல, ஆனால் ஒரு வாழ்க்கை மற்றும் சிந்தனை முறை. தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தளபதி 69 படத்தில் விஜயுடன் மோதும் பாபி தியோல்
”இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம்”: ஈரான் அதிபர் எச்சரிக்கை!