அதானி மற்றும் அமித்ஷா சொல்வதை மட்டும் தான் பிரதமர் மோடி கேட்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “ஆரம்பத்தில் நான் பாரத் ஜோடா யாத்திரை நடைபயணத்தை துவங்கியபோது 25 கி.மீ நடப்பது பெரிய விஷயமில்லை என்று எண்ணினேன். ஆனால் அந்த நடைபயணம் என் ஆணவத்தை அழித்தது. யாத்திரை துவங்கிய 2 முதல் 3 நாட்களுக்குள் முழங்கால் வலிக்க ஆரம்பித்தது.
நாட்டிலுள்ள மக்கள் வலியாலும் துன்பத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரலை கேட்க நம் அகந்தையை அழிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் குரலை நாம் கேட்க முடியும். இந்திய மக்களின் குரலை பிரதமர் மோடி கேட்கவில்லை. பின்னர் யாருடைய குரலை அவர் கேட்க விரும்புகிறார். மேக்நாத், கும்பகர்ணா ஆகிய இரண்டு பேருடைய பேச்சை மட்டும் தான் ராவணன் கேட்பார். அதுபோல தான் பிரதமர் மோடியும் அதானி மற்றும் அமித்ஷா சொல்வதை மட்டும் கேட்கிறார்.
நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல. பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் தேசத்துரோகிகள், தேச பக்தர்கள் அல்ல. என்னுடைய ஒரு தாய் அருகில் இருக்கிறார். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் கொலை செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் வன்முறையை கட்டுப்படுத்தாமல் என் தாயை கொலை செய்து வருகிறீர்கள்.
இந்திய ராணுவத்தால் ஒரே நாளில் மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த முடியும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. மணிப்பூர் மக்கள் கொல்லப்பட வேண்டும் என்பது தான் உங்களது எண்ணம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கரூர்: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ED மீண்டும் சோதனை!
ஓலாவின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை என்ன, விசேஷம் என்ன?
குட்ரோச்சி சொல்ரத கேக்கனுமாடா, வெண்ண!