நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசி வரும் மோடி இரண்டு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாததால் முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள், தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமரை பேச வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாட்களாக விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவை எம்.பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அவர்களது எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
நேற்று உள்துறை அமைச்சர் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசி முடித்த பிறகு எதிர்க்கட்சிகள், பிரதமர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி மாலை 5 மணி முதல் பேசி வருகிறார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மக்களவையில் பேசி வரும் மோடி, 9 ஆண்டுகளில் பாஜக செய்த சாதனைகள் குறித்தும், மூன்றாவது முறை ஆட்சி அமைந்தால் பாஜக செய்யும் சாதனைகள் குறித்தும் பேசி வருகிறார்.
மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை ஏன் ‘இந்தியா’ என்று மாற்ற வேண்டும் என்று விமர்சித்தார். பின்னர் காந்தி பெயரை நேரு குடும்பத்தினர் பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒரு ‘நோ பால்’. நாங்கள் ஆடுகளத்தில் இருந்து சிக்சர்களாக அடித்து வருகிறோம் என்று பல விஷயங்களை பேசி வரும் பிரதமர் கடந்த இரண்டு மணி நேரமாக மணிப்பூர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இதனால் அவையில் உள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் ’மணிப்பூர், மணிப்பூர்’ என்று முழக்கமிட்டனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத பிரதமர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசி வருகிறார்.
#INDIA alliance parties walked out after PM Modi did not speak a single word about Manipur in Lok Sabha#NoConfidenceMotion pic.twitter.com/E2Lm3ru3VB
— Surya Born To Win (@Surya_BornToWin) August 10, 2023
பிரதமர் மணிப்பூர் குறித்து பேசுவார் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் அவர் பேசாததால் அதிருப்தியில் தற்போது மக்களவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.
மோனிஷா
நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்
கிரிவலப் பாதையில் அசைவ உணவுகள் கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி