மோடி தார்மீக தோல்வி : இந்தியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு!

Published On:

| By Kavi

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று(ஜூன் 5) இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

மாலை மல்லிகார்ஜுனா கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும் வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா ( உத்தவ் தாக்கரே) கட்சித் தலைவர் சஞ்சய் ராவுத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மல்லிகாஜுன கார்கே, “இந்தியா கூட்டணி கட்சித் தலைவர் அனைவரும் ஒன்றாக போராடினோம். மக்களின் தீர்ப்பு நரேந்திர மோடிக்கு எதிராகவும் அவரது அரசியலுக்கு எதிராகவும் உள்ளது.

மோடிக்கு இது ஒரு தார்மீக தோல்வி. அதோடு தனிப்பட்ட முறையில் அவருக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பு. இருப்பினும், மக்களின் விருப்பத்தைத் தகர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

நமது அரசியலமைப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதிக்கான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் இந்தியா கூட்டணி வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

T20 World Cup: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

இனியும் வேடிக்கை பார்க்க முடியாது… அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel