மோடி கபடி லீக்: பணத்தை சுருட்டினாரா அமர் பிரசாத் ? வீடியோ புகார்!

அரசியல்

பல பேர் ரத்தம் சிந்தி வளர்த்த பாஜகவை அமர் பிரசாத் ரெட்டி போன்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது தொண்டர்கள் அனைவரின் கடமை என்றும் மோடி கபடி லீக் போட்டிகளில் அவர் பணத்தை சுருட்டியதாகவும் பாஜக நிர்வாகி ஒருவர் பரபரப்பு வீடியோ புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக இளைஞரணி – விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. இவர் மீது பாஜக நிர்வாகி ஒருவரே புகார் கூறியுள்ளது தற்போது அக்கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் மோடி கபடி லீக் போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மோடி கபடி லீக் போட்டியில் எவ்வளவு பணம் சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை அமர் பிரசாத் ரெட்டி சுருட்டியுள்ளதாக பாஜக நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் , அந்த வீடியோவில், “ நான் கற்பனையில் பேசவில்லை. அமர் பிரசாத் ரெட்டி மோடி கபடி லீக் மூலம் பணத்தை சுருட்டியதற்கான தகுந்த ஆதாரம் தன்னிடம் இருக்கிறது.

எங்கே சமர்ப்பிக்க வேண்டுமோ அங்கே அந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.

பாஜக என்ற கட்சியில் பல தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கட்சி மக்களுக்கான கட்சி.

கமலாலயத்தில் யாரும் கால் எடுத்து வைக்க கூடாது என்று சொல்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் அமர் பிரசாத் . நீங்கள் செய்யும் ஊழல் தீவிரவாதத்திற்கு சமமானது.

தயவு செய்து அதை நிறுத்திக் கொள்ளுங்கள். திமுக வேண்டாம் என்று பாஜகவிற்கு வரவேண்டுமென நினைப்பவர்கள் பாஜக வில் இருக்க வேண்டும் என்றால் கட்டபஞ்சாயத்து, ஊழல் இல்லாமல் பாஜக செயல் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாண்டஸ் புயல் எப்போது கரையைக் கடக்கும் ?

கோரிக்கை வைத்த பள்ளி மாணவி : பரிசு கொடுத்த முதல்வர்!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *