பந்திபூர் புலிகள் சரணாலயத்திற்கு வந்து பார்வையிட்ட முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன புதிய முனையம், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவற்ற துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 8) சென்னை வந்தார்.
அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நேற்று இரவு மைசூருக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் இன்று காலையில் மைசூரு அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்த முன்னணி களப் பணியாளர்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுடன் உரையாடினார்.
அதனைத் தொடர்ந்து 20 கி.மீ தூரம் சவாரியும் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் பந்திபூர் புலிகள் சரணாலயத்தில் வந்து சவாரி மேற்கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
மேலும் ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், மூன்று நாள் மெகா நிகழ்வை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, சமீபத்திய புலிகள் கணக்கெடுப்புத் தரவை வெளியிட உள்ளார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, யானை பாகன்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடும் பிரதமர், ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதி பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளார்.
அதன்பின்னர், கார்மூலமாக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்கிறார்.
காலை சுமார் 9.30 மணியளவில் தெப்பக்காடு வரும் பிரதமர் மோடி, 10 நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மைசூர் திரும்புவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு, முதுமலை, மசினகுடி பகுதிகளில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சுமார் 2,000 போலீஸாருடன் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தோனி சொன்ன வார்த்தையால் ருத்ரதாண்டவம் ஆடிய ரஹானே
ஸ்டெர்லைட் போராட்டம்… இப்போதல்ல முப்பது ஆண்டுக் கால தொடர்ச்சி!