லட்சத்தீவில் மோடி : பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸ்!

அரசியல்

லட்சத்தீவில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் நிலையில், அவருக்கான பாதுகாப்பு பணியில் தமிழக போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார். ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார். லட்சத்தீவு அகத்தி விமான நிலையம் சென்ற அவர், அகத்தி தீவில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பங்காரம் தீவு சென்று அங்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவு பங்காரத்தில் ஓய்வு எடுக்கிறார் பிரதமர் மோடி.

நாளை ஜனவரி 3 ஆம் தேதி காலையில் லட்சத்தீவு தலைநகரான ஏழு கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கவத்தி தீவில் ஏற்பாடுகள் செய்துள்ள பள்ளி விழாவில் கலந்து கொண்டு மீண்டும் அகத்தி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக நாளை கேரளா செல்கிறார்.

தற்போது லட்சத்தீவில் தங்கியுள்ள பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பணியில் லட்சத்தீவு போலீஸ், மத்திய துணை ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எஸ்பி தலைமையில் நான்கு டிஎஸ்பி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

தனுஷ் – சிவராஜ் குமார் டான்ஸ்: கேப்டன் மில்லர் புது பாடல்!

அரசு கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களில் 8 மணி நேரமாக தொடரும் ஐடி ரெய்டு!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *