ஜி.கே.வாசன், தம்பிதுரையுடன் டின்னர் சாப்பிட்ட மோடி
பிரதமர் மோடி நேற்று இரவு (ஆகஸ்ட் 2) தென்னிந்திய என்.டி.ஏ கூட்டணி எம்.பி,க்களுடன் உணவு அருந்தியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அனைத்து எம்.பி.க்களும் டெல்லியில் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் எம்.பி.க்கள் நேரம் கிடைக்கும் போது பிரதமரைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தசூழலில் பிரதமர் மோடி தென்னிந்திய எம்.பிக்களுடன் உணவருந்தியுள்ளார். அதிமுக எம்.பி தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ஜி.கே.வாசன் ஆகியோர் மோடியுடன் இந்த டின்னர் நிகழ்வில் கலந்துகொண்டு, பிரதமர் அருகே அமர்ந்து உணவருந்தினர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு , தென்னிந்தியாவில் உள்ள என்.டி.ஏ எம்.பி.க்களுடன் நான் ஒரு அற்புதமான சந்திப்பை மேற்கொண்டேன். பணியாரம், அப்பம், வெஜிடபிள் குருமா, புளிசாதம், பருப்பு சாம்பார், அடை அவியல் என தென்னிந்திய உணவுகளுடன் ஒரு சிறப்பான டின்னராக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் பாஜக பலவீனமாக இருக்கிறது. இதனால் எப்படியாவது தென்னிந்தியாவில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது.
கடந்த ஜூலை 18ஆம் தேதி நடந்த என்.டி.ஏ ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து அருகில் அமரவைத்திருந்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில் தென்னிந்திய எம்.பி.க்களுடன் பிரதமர் உணவருந்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரியா
புறக்கணித்த சபாநாயகர்: அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்!
ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!