பிரதமர் மோடி நாளை ஜனவரி 2 ஆம் தேதி திருச்சி வருகிறார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்புள்ள மத்திய அரசின் நலத் திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி திருச்சி சுற்று வட்டாரத்தில் பேருந்து ரூட்களை போக்குவரத்து போலீஸார் மாற்றியமைத்திருக்கிறார்கள். அதேபோல் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விமான சேவையை பிரதமர் வருவதற்கு முன்பும் பின்பும் சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
அதனால் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் இன்று ஜனவரி 1 ஆம் தேதி இரவே சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி செல்கிறார்கள். இவர்கள் மூவரும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணிக்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மோடியை தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், நாளை பிரதமரை வரவேற்கிறார்.
இந்த பின்னணியில் ஆளுநர், அண்ணாமலை, ஓ. பன்னீர் மூவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்வது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…