ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி

Published On:

| By indhu

3-வது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், மோடி இன்று (ஜூன் 7) உரிமை கோரினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இன்று காலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணித் தலைவராகவும், மக்களவை பாஜக தலைவராகவும் நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சியமைக்க கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து உரிமைக் கோரினார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த நரேந்திர மோடி, குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்கும் உரிமையை கோரினார்.

மேலும், 3வது முறையும் பிரதமராக தானே பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளார். ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கும் விழா ஜூன் 9ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிவேகத்தில் பஸ்… தடுமாறிய இளைஞர்…மின்னல் முரளியாக மாறிய கண்டக்டர்!

கங்குவா படத்திற்கு போட்டியாக கவினின் “கிஸ்”..? அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்கள்..!