டெல்லியில் பொங்கல் கொண்டாடிய மோடி

Published On:

| By christopher

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று பொங்கல் விழா விமரிசையாக கொண்டாப்பட்டது.

இதில், வெள்ளை வேட்டி, கருப்பு சட்டை, துண்டு அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி, பொங்கல் தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த மாட்டுக்கு உணவளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நாட்டிய கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்த மோடி அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். முதலில் ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தொடங்கிய அவர், “நாடு நேற்று லோஹ்ரி பண்டிகையை கொண்டாடியது. சிலர் இன்று மகர சங்கராந்தியை கொண்டாடுகிறார்கள், சிலர் நாளை கொண்டாடுவார்கள், மக் பிஹுவும் வருகிறது, இந்த பண்டிகைகளுக்காக நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகையானது ‘ஒரே நாடு’ என்ற உணர்வை சித்தரிக்கிறது… இந்த ஒற்றுமை உணர்வு 2047 ஆம் ஆண்டுக்கான ‘வளர்ந்த இந்தியா’ என்பதற்கு வலுசேர்க்கும்” என்றார்.

மேலும் “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டிய மோடி, அதற்கு நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், நடிகை மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”வதந்திகளை பரப்புகிறார்கள்” : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

இளம் வீரரைப் பார்த்து கோபமாகக் கத்திய ரோஹித்… உண்மையில் என்ன நடந்தது?

பொங்கல் பண்டிகை: முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel