திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 11) பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி
அங்கிருந்து விமானப்படை விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
மதுரையில் இருந்து சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார் பிரதமர் மோடி.
அதே நேரம், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கரூரில் இருந்து சாலை மார்க்கமாக காந்தி கிராமம் செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை- திண்டுக்கல் நெஞ்சாலையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்