திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 11) பங்கேற்கிறார். இந்த விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிஹாப்டர் மூலம் திண்டுக்கல் அம்பாத்துரைக்கு வந்தடைந்தார். திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு அவர் சாலை மார்க்கமாகச் சென்றார். அப்போது மக்கள் இருபுறங்களில் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். சாலையோரம் திரண்டிருந்த மக்களைப் பார்த்து காரில் நின்றபடி பிரதமர் மோடி கையசைத்தார்.
ஜெ.பிரகாஷ்
மும்முனை போட்டி: நாளை இமாச்சலப் பிரதேச தேர்தல்!
10% இடஒதுக்கீடு: அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!