விசிக அலுவலகத்தில் தமிழில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு!

அரசியல்

மத்திய அரசு தடை விதித்த பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தமிழில் இன்று (பிப்ரவரி 5) மாலை விசிக அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்தியா: மோடி கேள்வி என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. முதல் ஆவணப்படம் குஜராத் கலவரத்தையும் பிரதமர் மோடியையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஒளிபரப்ப சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் இதுதொடர்பான லிங்க்குகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் நீக்கின.

முதல் ஆவணப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் ஜனவரி 24ஆம் தேதி இரண்டாம் பாகமும் வெளியிடப்பட்டது. பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு முஸ்லிம்களுடனான மோடி அரசாங்கத்தின் உறவு மற்றும் வகுப்புவாத பிரச்சினைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.


இந்த ஆவணப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதுபோன்று உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னையில் சில இடங்களில் மாணவர்கள் அமைப்பினர் பொதுவெளியில் லேப்டாப், மொபைல் உள்ளிட்டவற்றில் பார்த்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் “இந்தியா: மோடி கேள்வி” ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. அதுவும் தமிழ்க் குரல் பதிவுடன் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்” என திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று அம்பேத்கர் திடலில் தமிழ்க் குரல் பதிவுடன் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது.

பிரியா

முஸ்லிம்களை துன்புறுத்துகிறாரா மோடி? – பிபிசி ஆவணப்படம் 2 சொல்வது என்ன?

அட்டகாசமான நடிப்பில் கவின்: வெளியானது ”டாடா” படத்தின் ட்ரெய்லர்!

ரஜினியின் ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *