கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி சென்னை வர உள்ளார்.
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்லும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் வரும் 19 முதல் 31ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன.
தொடக்க விழாவில் மோடி பங்கேற்பு!
இதன் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்திருந்தார்.
அதன்படி வரும் 19ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அதன்பின்னர் மாலை 6 மணி முதல் 7.45 மணி வரை கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார்.
ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலில் வழிபாடு!
அன்று இரவு கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தங்கும் மோடி, மறுநாள் ஜனவரி 20ஆம் தேதி காலை 11 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார்.
அங்கிருந்து சாலை வழியாக காரில் பயணித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார். அங்கு 12.40 மணி வரை மோடி சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் பிற்பகல் 2.10 மணிக்கு திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கிருந்து ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுகிறார். பிறகு ஹெலிகாப்டரில் மதுரை வரும் பிரதமர் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
பாஜகவினருக்கு 5 பாஸ் மட்டுமே!
இதற்கிடையே நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் தமிழக பாஜகவினருக்கு வெறும் 5 விஐபி பாஸ்களை மட்டுமே வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கோபத்தை எழுப்பியுள்ளது.
தொடக்க விழா நடைபெற உள்ள நேரு ஸ்டேடியத்தில் பொதுவாக சுமார் 40 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்க முடியும்.
ஆனால் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தொடக்க விழாவில் 11 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பாஜக சார்பில் 2,000 பேருக்கான அனுமதி சீட்டு வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் 5 விஐபி பாஸ் மட்டுமே வழங்க முடியும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தேசியத்தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளாராம்.
PM Modi took an embarrassing turn for CM MK Stalin. Mr. Stalin to come to deliver his speech, the crowd started chanting 'Modi, Modi', with PM Modi having to come to the rescue of the CM by requesting the crowd to let Mr. Stalin to start his speech.#VanakkamModi #ModiAgainIn2024 pic.twitter.com/1SQxEDkokW
— Rudhra Nandu (@rudhranandu) January 3, 2024
பாஜகவினருக்கு அனுமதி மறுப்பு ஏன்?
இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் நாம் விசாரித்த போது, சமீபத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனர்.
அங்கு ஸ்டாலின் பேசும்போது, அரங்கில் இருந்தவர்கள் ‘மோடி, மோடி’ என்று கோஷம் எழுப்பினர். இதனால் அவர் கடும் அப்செட் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும், கேலோ இந்தியா தொடக்க விழாவில் தங்களது பலத்தை காட்ட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் கட்சியினரை பெரும் அளவில் திரட்டும்படி அறிவுறுத்தபட்டுள்ளது.
திருச்சியில் மோடி மோடி என்று கோஷமிட்டதற்கு பதிலடியாக, நேரு ஸ்டேடியத்தில் மோடி பேசும்போது ஸ்டாலின் ஸ்டாலின் என்று கோஷமிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
அதற்காக தான் வேண்டுமென்ற பாஜகவினருக்கு மிக மிக சொற்பான அனுமதி சீட்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அருண்விஜய்
சுங்கக்கட்டணம்: இதை செய்யாவிட்டால் ஃபாஸ்டேக் எண் ரத்து!
இந்த வக்கனைக்கு ஒன்றும் குறைச்சல் இல்ல..வகை தொகை இல்லாமல் அனைத்திலும் லஞ்சம் ஊழல் வழக்கில் உலகமே சிரிக்கும் செயலிலும் மான மிழந்த அரசு…மோடி வரும் போது வெட்டி கூச்சல் போட்டு ஆர்க்ஸம் அடைய போகிறதாம்…வெட்க கேடு..