மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்
மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மகளிருக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையைப் பெற்றுள்ளது மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா.
இதனையடுத்து பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடிக்கு இன்று (செப்டம்பர் 22) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜக மகளிரணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பிரதமர் மோடியின் காலில் விழுந்தார்.
இதனை கண்டு மோடி ஒரு வினாடி அப்படியே நின்றுவிட்டார். பின்னர் வானதி சீனிவாசனை பார்த்து “இப்படி காலில் விழக்கூடாது” என்று அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்கு சென்ற பிரதமருக்கு மாலை அணிவித்த மகளிர் சிலர் மோடியின் காலில் விழுந்தனர். அப்போது பிரதமரும் அவர்களது கால்களில் விழுந்தார்.
மோனிஷா
சனாதன பேச்சு: உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ரூ.25 கோடி லாட்டரி: ஜாக்பாட் அடித்தது யாருக்கு?