மோடி 3.0 அமைச்சரவை : யார் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!

அரசியல் இந்தியா

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலை தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக நேற்று (ஜூன்9) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 71 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதில் பாஜக சார்பில் 61 பேரும், கூட்டணி கட்சி சார்பில் 11 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Image

அமைச்சர்கள் – துறை :

 • ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை 
 • அமித்ஷா – உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை
 • நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
 • ஜே.பி.நட்டா – சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் உரத்துறை
 • சிவராஜ் சிங் சவுகான் – விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை
 • நிர்மலா சீதாராமன் – நிதித்துறை
 • ஜெய்சங்கர் – வெளியுறவுத்துறை
 • கிரண் ரிஜிஜூ – நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
 • அஸ்வினி வைஷ்ணவ் – ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
 • மன்சுக் மாண்ட்வியா – தொழிலாளர் நலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
 • சி.ஆர். பாட்டீல் – நீர்வளத்துறை
 • மனோகர் லால் கட்டார் – மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
 • பியூஷ் கோயல் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை
 • தர்மேந்திர பிரதான் – கல்வி மற்றும் மனிதவளத்துறை
 • சர்பானந்தா சோனாவால் – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை
 • ஓரம் ஜூவல் – பழங்குடியினர் நலத்துறை
 • கிரி ராஜ் சிங் – ஜவுளித்துறை
 • ஜோதிராதித்ய சிந்தியா – வடகிழக்கு நலன் மற்றும் தொலைத்தொடர்புத்துறை 
 • பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
 • கஜேந்திர சிங் ஷெகாவத் – சுற்றுலாத்துறை
 • அன்னபூர்ணா தேவி – மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
 • ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை
 •  கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை 
 • வீரேந்திர குமார் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
 • பிரகலாத் ஜோஷி – நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை
 • ராம் மோகம் நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி) – விமான போக்குவரத்துத்துறை
 • சிராக் பஸ்வான் (லோக் ஜன சக்தி கட்சி) – உணவு பதப்படுத்தும் தொழில்த்துறை
 • குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி) – கனரகத் தொழில் மற்றும் எஃகு துறை
 • ஜித்தன் ராம் மஞ்சி (ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சி) – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
 • லலன் சிங் (ஐக்கிய ஜனதா தள கட்சி) – பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 

இணை அமைச்சர்கள் – துறை :

 • எல்.முருகன் – தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை
 • அஜய் தம்தா – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
 • சோபா கரந்லாஜே – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
 • கீர்த்தி வர்தன் சிங் – சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாடு மற்றும் வெளியுறவுத்துறை
 • சாந்தனு தாகூர் – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை
 • நித்யானந்த் ராய் – உள்துறை
 • சுரேஷ் கோபி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை
 • கிரிஷன் பால் குர்ஜால் – கூட்டுறவுத்துறை
 • பங்கஜ் சவுத்ரி – நிதித்துறை
 • எஸ்.பி.சிங் பாகேல் – பஞ்சாயத்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 
 • ஜிதின் பிரசாத் – வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை
 • ஸ்ரீபாத் நாயக் – எரிசக்தித்துறை
 • பண்டி சஞ்சய் குமார் – உள்துறை
 • கம்லேஷ் பஸ்வான் – ஊரக வளர்ச்சித்துறை
 • சோமண்ணா – நீர்வளத்துறை மற்றும் ரயில்வேத்துறை
 • பாகிரத் சவுத்ரி – வேளாண் துறை
 • சதீஷ் சந்திர துபே – நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை 
 • ரவ்னீத் சிங் – ரயில்வேத்துறை
 • சஞ்சய் சேத் – பாதுகாப்புத்துறை 
 • துர்கா தாஸ் உய்கே – பழங்குடியினர் நலத்துறை
 • ரக்‌ஷா நிகில் கட்சே – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
 • சுகந்தா மஜும்தர் – கல்வித்துறை மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சித்துறை
 • சாவித்ரி தாக்கூர் –  மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
 • பி.எல் வர்மா – நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை
 • முரளிதர் மொஹோல் – கூட்டுறவு மற்றும் விமான போக்குவரத்துத்துறை
 •  பகீரத் சவுத்ரி – வேளாண் துறை
 • துர்கா தாஸ் உய்கே – பழங்குடியினர் நலத்துறை
 • டோகன் சாஹு – வீட்டுவசதி மற்று நகர்புற விவகாரங்கள் துறை
 • ராஜ் பூஷன் சௌத்ரி – நீர்வளத்துறை
 • பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா – கனரகத் தொழில் மற்றும் எஃகு துறை
 • ஹர்ஷ் மல்ஹோத்ரா – சாலை போக்குவரத்துத்துறை
 • ராம்தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சி) – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
 • ராம் நாத் தாகூர் (ஐக்கிய ஜனதா தள கட்சி) – வேளாண் துறை
 • அனுப்பிரியா படேல் (அப்னா தள கட்சி) –  சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் உரத்துறை
 • சந்திரசேகர் (தெலுங்கு தேசம் கட்சி) – ஊரக வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்புத்துறை

5 இணையமைச்சர்கள் (தனி பொறுப்பு) – துறை :

 • ராவ் இந்தர்ஜீத் சிங் – திட்டமிடுதல் மற்றும் கலாச்சாரத்துறை 
 • ஜிதேந்திர சிங் – பிரதமர் அலுவலகம், புவி அறிவியல் மற்றும் அனுசக்தி மற்றும் விண்வெளித்துறை
 • அர்ஜுன்ராம் மேக்வால் – சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை
 • பிரதாப் ராவ் யாதவ் ( சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சி) – சித்தா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
 • ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரிய லோக் தளம் கட்சி) – திறன் மேம்பாட்டு, தொழில் முனைவு மற்றும் கல்வித்துறை

கிறிஸ்டோபர் ஜெமா

மோடி 3.0 அமைச்சரவை : அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் சிண்டேவும் அதிருப்தி!

சென்னையில் சூறாவளி காற்றுடன் மழை! : மக்கள் மகிழ்ச்சி!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

1 thought on “மோடி 3.0 அமைச்சரவை : யார் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!

 1. முக்கியத் துறைகள் எல்லாம் அவங்களுக்கே வச்சுகிட்டாங்க போல, பாக்கலாம், எத்தனை நாளைக்குனு? நாயுடுகாரு, நிதிஷ்ஜிலாம் சும்மா வேடிக்கை பாத்துகிட்டு இருக்க மாட்டாங்க, சீக்கிரம் அவங்கள்கிட்ட இருக்கற எம்பிக்களை எவ்ளொ சீக்கிரம் இவங்க பக்கம் வரவழைக்கறாங்களோ, அவ்ளொ காலம் ஆட்சி நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *