எம்.எல்.ஏக்கள் கோரிக்கை : ஆய்வு செய்ய குழு அமைப்பு!

அரசியல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய தொகுதி கோரிக்கைகள் குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தங்களது தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி,

15 நாட்களுக்குள் பட்டியலை, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

குடிநீர் பணிகள், வேளாண் பணிகள், இணைப்பு பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், புதிய கல்வி நிறுவனங்கள்,

மின் மயானம், நவீன நுாலகம், நவீன பேருந்து நிலையம், புதிய சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றை பரிந்துரைக்கலாம் என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, மே 7 ஆம் தேதி ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ விரிவுபடுத்தப்படுவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதற்காக, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

திமுக, அதிமுக, பாஜக என $அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில்,

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய தொகுதி கோரிக்கைகள் குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட பணிகளில் இருந்து மாநில அளவிலான பணிகளை தேர்வு செய்திடும் குழுவின் மூலம் இறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் வரும் நிதியாண்டுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது

முதலமைச்சர் திட்ட நிதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்ட பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்தப்படுவதை துறை செயலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

மாதாந்திர பணிகள் முன்னேற்ற அறிக்கையினை சிறப்பு திட்ட செயலாக்கு துறைக்கு அனுப்பிட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

ஐ.டி. படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் : அமைச்சர் பொன்முடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *