mkstalin will participate in President dinner

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத்தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி டெல்லி செல்கிறார்.

ஜி20 உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டம் டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தியா தலைமையேற்றுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர், பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, செப்டம்பர் 9-ம்தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் டெல்லி பாரத் மண்டபத்தில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் என பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இதற்காக வரும் 9ம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். விருந்திற்கு பின்னர் 11ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் முதல்வர் சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த விருந்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

Ballon d’Or விருது பட்டியலில் முதன்முறையாக இடம்பெறாத ரொனால்டோ

‘பாரத்’ பெயருக்கு ஆதரவா?: வடிவேலு ரியாக்சன்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0