ரூ.68,873 கோடி திட்டங்கள் தொடக்கம் : முதலீட்டாளர்களிடம் ஸ்டாலின் வேண்டுகோள்!

Published On:

| By christopher

MKStalin launched Rs.68,873 crore projects: appeal to investors!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.68,873 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்த்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட முடிவுற்ற திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புள்ள 19 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் இன்று முக்கியமான நாள். எத்தனை மாநாடுகள் நடத்தினோம் என்பதை விட அதன் மூலமாக எவ்வளவு முதலீட்டை ஈர்த்தோம் என்பது தான் முக்கியமானது. கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.9.74 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

புரிந்துணர்வு திட்டங்களில் கையெழுத்திட்டதோடு மட்டும் நின்று விடாமல், அவற்றை விரைந்து செயல்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கிடைக்கவும் பணியாற்றி வருகிறோம்.

இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் சுமார் 1.06 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும் என அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் மாற வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞர்களின் திறனை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

திறன்மிகு தொழிலாளர்கள் உள்ள மாநிலம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களை தமிழ்நாடு கொண்டிருக்கிறது.

மாநிலத்தில் பெண்களின் கல்வியறிவும், வேலைவாய்ப்பு விகிதமும், நாட்டின் சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உலகம் முழுவதும் தெரியும்.

தொழிற்துறை வளர்ச்சி, வணிகம் செய்வதை எளிதாக்குவது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்க்கை வசதிகளை எளிதாக்குவது, இவையெல்லாம் அரசின் குறிக்கோள்கள். இவற்றை செயல்படுத்துவதை எங்களுடைய கடமையாக கருதுகிறோம்.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி, தமிழ்நாட்டில் பரவலான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதே திமுக அரசின் நோக்கம்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Share Market : இரட்டை இலக்க லாபத்தை பதிவு செய்த முருகப்பா குழுமம்!

2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லையா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment