மருத்துவமனையில் ஜி.கே.மணி : நலம் விசாரித்த முதல்வர்!

அரசியல்

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவம்பர் 10) சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே.மணியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் உடல் நலம் விசாரித்துள்ளார்.

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க கெளரவ தலைவருமாக இருப்பவர் ஜி.கே.மணி. இவருக்கு கடந்த வாரம் முதல் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனையின் பேரில் சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்துள்ளார்.

இதற்கிடையே மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக ஜி.கே.மணியின் உடல்நிலை தேறி வருவதாக பாமகவினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

‘சாமானியன்’: இணையும் ஹிட் கூட்டணி!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *